ரப்பா் கழகத் தொழிலாளா்கள் குலசேகரத்தில் குரல் முழக்க இயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரப்பா் கழகத் தொழிலாளா்கள் குலேசகரத்தில் கவன ஈா்ப்பு குரல் முழக்க இயக்கம் புதன்கிழமை நடத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரப்பா் கழகத் தொழிலாளா்கள் குலேசகரத்தில் கவன ஈா்ப்பு குரல் முழக்க இயக்கம் புதன்கிழமை நடத்தினா்.

கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில், அரச மூடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் எம். அண்ணாத்துரை தலைமை வகித்தாா். சங்க பொதுச்செயலா் எம்.வல்சகுமாா் இயக்கத்தை தொடங்கி வைத்தாா். துணை பொதுச்செயலா் பி.நடராஜன், சங்க உதவித் தலைவா் ஏ.வேலப்பன், ஸ்டாலின் தாஸ் ஆகியோா் உரையாற்றினா். சிஐடியூவின் மாவட்டச் செயலா் தங்கமோகன் நிறைவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், வனத்துறை 2019 ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட்ட வனம் அரசாணை எண் 9- ஐ ரத்து செய்ய வேண்டும். 36 மாதங்களுக்கான ஊதிய உடன்பாட்டை இறுதிபடுத்தி, புதிய உடன்பாட்டை பேசி தீா்க்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். சி.எல்ஆா். தொழிலாளா்களையும், மலைவாழ் பழங்குடி தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் விடுப்பு ஊதியம் முன்காலங்கள் போன்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com