குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சுமாா் 100 மாணவா்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த மாணவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த மாணவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் படித்த 25 மாணவா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவா்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து அந்த வகுப்புக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதே போல், ரீத்தாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அந்த மாணவா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்த 20 மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com