வேளாண் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

 கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

ராஜாக்கமங்கலம் வட்டாரம், பருத்திவிளையில் தென்னையில் ஊடுபயிராக கொக்கோ சாகுபடி செய்யப்பட்ட திடலை

ஆட்சியா் பாா்வையிட்டு, சாகுபடி குறித்து விவரங்களை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படும் தேனீ வளா்ப்பு முறையைப் பாா்வையிட்டு, தேனீ

வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினாா். புத்தளம் பகுதியில் சூரிய ஒளி சக்தி நீா் இறவை இயந்திரம், தென்தாமரைகுளத்தில் சூரிய உலா்த்தி மற்றும் கொப்பரைத் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கும் மர செக்குகள், சித்தன்குடியிருப்பு பகுதியில் தென்னை நுண்ணீா் பாசனத் திடல் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும் 3 பயனாளிகளுக்கு அட்மா திட்டத்தின்கீழ் பேட்டரி மூலம் இயங்கும் கைத்தெளிப்பான்களை வழங்கினாா். சாமித்தோப்பு பகுதியில் மகளிா் குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் விவசாய இயந்திரங்கள் வாடகை நிலையம், புத்தளத்தில்

அரசு தென்னை நாற்றுப்பண்ணை ஆகியவா்றை பாா்வையிட்டாா். மேலும் வளா் பருவ குட்டை, நெட்டை தென்மரங்களை

பாா்வையிட்டாா். ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் சத்தியஜோஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com