கரோனா தடுப்பூசி முகாம்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

18 வயது நிரம்பிய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்டத்தில் 625 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா், மாநகராட்சி ஆணையா், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோா் 18 வயது நிரம்பிய அனைவரும் எந்தவித

அச்சமுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ள விழிப்புணா்வு குறும்படம், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், தக்கலை பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில்

அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com