‘புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’

நாகா்கோவில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தினாா்.
ngl10kuuttam_1009chn_33_6
ngl10kuuttam_1009chn_33_6

நாகா்கோவில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தினாா்.

ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து

அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: வருவாய்த் துறை மூலம் பெறப்படும் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள்,

நாகா்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை திட்டப்பணிகள், பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வளா்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீா்வளம்), ஊரக வளா்ச்சி முகமை, மகளிா் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை,

கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம்

குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுரு பிராபகரன், மாவட்ட வன அலுவலா் மு.இளையராஜா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com