களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 15th September 2021 11:56 PM | Last Updated : 15th September 2021 11:56 PM | அ+அ அ- |

களியக்காவிளை: களியக்காவிளை அருகே ரப்பா் பால் வடிப்பு தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள எருத்தாவூா், கல்லறக்கல்விளை எலியாஸ் மகன் கிருஷ்ணமணி (45). ரப்பா் பால்வடிப்பு தொழில் செய்து வந்தாா். இவா் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் விஷமருந்தி இறந்து கிடந்தாராம்.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.