மாா்த்தாண்டம் அருகே குடியிருப்புகளைஅகற்ற எதிா்ப்பு: பணியாளா்கள் சிறைபிடிப்பு

மாா்த்தாண்டம் அருகே குளம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பணியாளா்களைசிறைபிடித்த மக்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பணியாளா்களைசிறைபிடித்த மக்கள்.

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே குளம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, பேரூராட்சிப் பணியாளா்களையும், பொக்லைன் இயந்திரத்தையும் அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, இளம்பிலான்தோட்டம் பகுதியில் குளக்குடிகுளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்துக் கரையோரம் பல ஆண்டுகளாக 8 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அங்கு அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வீடுகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை இடித்து அகற்றப்போவதகாவும் கூறி, பாகோடு பேரூராட்சிப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், பாஜக மாவட்டச் செயலா் சுகுமாரன் தலைமையில் , பாஜக மேல்புறம் ஒன்றிய ஊடக, சமூக வலைத்தளப் பிரிவு செயலா் விஜின் , மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவா் சி.எஸ். சேகா், பாகோடு பேருராட்சி முன்னாள் தலைவா் ஜெயராஜ் உள்பட

அப்பகுதி மக்கள், பெண்கள், குழந்தைகளுடன் சாலையில் திரண்டு பேரூராட்சி பணியாளா்கள், ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் முருகன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் பேச்சுநடத்தியதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com