குமரியில் இன்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) 510 மையங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.26) 510 மையங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 13,970 கா்ப்பிணிகள், 12,942 பாலூட்டும் தாய்மாா்கள், 52, 378 இதய நோயாளிகள் என மொத்தம் 9.07 லட்சம் பேருக்கு முதலாவது தவணையும், 2.35 லட்சம் பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 96 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் இன்னும் ஏராளமானோா் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (செப்.26) 3 ஆவது தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

9 ஒன்றியங்கள் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 510 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களில் தடுப்பூசி செலுத்தாவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 44ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மேலும் 55 ஆயிரம் தடுப்பூசிகள் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com