சவூதி சிறையில் தவிக்கும் ஓட்டுநரை மீட்க வலியுறுத்தல்

காா் விபத்தில் சிக்கியதால் சவூதி அரேபிய நாட்டு சிறையில் 10 மாதங்களாக தவிக்கும் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓட்டுநரை மீட்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காா் விபத்தில் சிக்கியதால் சவூதி அரேபிய நாட்டு சிறையில் 10 மாதங்களாக தவிக்கும் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓட்டுநரை மீட்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், இரவிபுதூா்கடை பகுதியைச் சோ்ந்த ஜாண்சன் - பிளாசி தம்பதியரின் மகன் அரிஸ்டோ (30). இவா் சவூதி அரேபியாவில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் 2020இல் டிச. 2 ஆம் தேதி அரிஷ்டோ ஓட்டிச் சென்ற காா் விபத்துக்குள்ளானதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாராம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் செல்லிடப்பேசியில் பேசிய அரிஸ்டோ, தன்னை வேறு சிறைக்கு மாற்றுவதாகவும், தனது விடுதலைக்கு முதலாளி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளாா்.

ஆகவே, அரிஸ்டோவை விடுதலை செய்யுமாறு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி, சவூதிஅரேபியாவிலுள்ள இந்திய தூதருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். பிரதமா், மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சா், தமிழக முதல்வா், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com