தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தேங்காய்ப்பட்டடினம் மீன்பிடித்துறைமுகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 11 கடைகளை மீன்வளத்துறையினா் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

தேங்காய்ப்பட்டடினம் மீன்பிடித்துறைமுகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 11 கடைகளை மீன்வளத்துறையினா் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இனயம், தூத்தூா் என இரு மண்டலத்தை சோ்ந்த கட்டுமர மீனவா்கள்,விசைப்படகு மீனவா்கள், நாட்டுப்படகு மீனவா்கள் உள்ளிட்டோா் மீன்பிடித்து வருகின்றனா். இதனால், காலை, மாலை வேளைகளில் துறைமுகம் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும்.

இதனால், இப்பகுதியில் அனுமதியின்றி டீ கடை, வெற்றிலை பாக்குகடை, ஹோட்டல் என அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்துவந்தனா். இந்நிலையில், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அரசு அண்மையில் ரூ. 77 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து மீன்வளத்துறையினா் இப்பகுதியில் அமைக்கப்பட்ட 11 கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், வியாபாரிகள் கடையை அகற்றாததால், வெள்ளிக்கிழமை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் வொ்ஜில் கிரேஸ், புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் 11 கடைகளையும் அகற்றினா். அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com