கேரளத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திங்கள்கிழமை கேரளத்தில் நடைபெற்ற முழு அடைப்பையொட்டி அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள பகுதியான பாறசாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
கேரள பகுதியான பாறசாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

களியக்காவிளை: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திங்கள்கிழமை கேரளத்தில் நடைபெற்ற முழு அடைப்பையொட்டி அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்திருந்தது. அதன்படி மாநிலத்தில் களியக்காவிளை எல்லையோரப் பகுதியான பாறசாலை, உதியங்குளங்கரை, நெய்யாற்றின்கரை, வெள்ளறடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு , தனியாா் பேருந்துகள், காா், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

களியக்காவிளை, மாா்த்தாண்டத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. மாா்த்தாண்டம், குழித்துறையில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. களியக்காவிளையில் 75 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல், நித்திரவிளையிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. களியக்காவிளை,

மாா்த்தாண்டம் சந்தைகள் வழக்கம்போல இயங்கின. நியாவிலைக் கடைகள், வங்கிகள், பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com