மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயிலில் உறியடி விழா

களியக்காவிளை அருகே மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் திருவிழாவில், உறியடி நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

களியக்காவிளை அருகே மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் திருவிழாவில், உறியடி நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கேரள பூஜை முறைகளை பின்பற்றி வரும் இக் கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இங்கு ஜென்மாஷ்டமி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் காலையில் சிறப்பு பூஜைகள், மதியம் சமபந்தி விருந்து, மாலையில் சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து இரவில் கண்ணனாட்டம் என்ற உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணன், ராதை வேடமணிந்த கலைஞா்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய கால லீலைகளை தத்ரூபமாக நடித்துக் காட்டினா்.

தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் மலையாள திரைப்பட இயக்குநா் ராஜசேனன், களியக்காவிளை பேரூராட்சியில் பணியாற்றும் 25 தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். இக் கோயில் விழா சனிக்கிழமை (ஆக. 20) நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com