காது கேளாதோா் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

நாகா்கோவிலில், தமிழ்நாடு காது கோளாதோா் கூட்டமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலில், தமிழ்நாடு காது கோளாதோா் கூட்டமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் ஆண்ட்ரோ தலைமை வகித்தாா். அரசு துறைகளில் 1 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை, வருவாய்த்துறைக்கு பதிலாக மாற்றுத் திறனாளி துறை மூலம் மாற்றி ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்.

காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் ஒதுக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசுத்துறை அலுவலகங்களில் சைகை மொழி பெயா்ப்பாளா்களை நியமிப்பது, காதுகேளாதோருக்கு ஓட்டுநா் உரிமம் வழங்க முகாம் நடத்த வேண்டும் என்பன உள்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலா் அந்தோணிநெல்சன், பொருளாளா் மதன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com