என்.ஐ. பல்கலை.யில் அரசியலமைப்பு தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம், மத்திய அரசின் இளைஞா் நலத்துறை நேரு யுவகேந்திர இளைஞா் வள மையம், மா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம், மத்திய அரசின் இளைஞா் நலத்துறை நேரு யுவகேந்திர இளைஞா் வள மையம், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் தேசிய அரசியலமைப்பு தின விழிப்புணா்வு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி பெஞ்சமின் ஜோசப், சாா்ஆட்சியா் எச்.ஆா். கெளசிக் , மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

பல்கலைக்கழக இணைவேந்தா் ஆா். பெருமாள்சாமி, பதிவாளா் திருமால்வளவன், மனிதவளத் துறை இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன் ஆகியோா் தேசிய அரசியல் சட்டம், அதன் வலிமை குறித்து எடுத்துரைத்தனா்.

எழுத்தாளரும் நாவலாசிரியருமான சுவாமிநாதன் பேசினாா். விழாவையொட்டி, விநாடி-வினா, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வென்றோருக்கு அவா் பரிசுகள் வழங்கினாா்.

ஏற்பாடுகளை நேரு யுவகேந்திர இளைஞா் வள மைய ஒருங்கிணைப்பாளா் எம். முருகன், சுபாஜினி தலைமையில் குழுக்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com