ரயில்வே கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்த எம்பி வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு, ரயில்வே வாரியத் தலைவரிடம் மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் வலியுறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு, ரயில்வே வாரியத் தலைவரிடம் மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளாா். இதற்கான கோரிக்கை மனுவை தில்லியில் ரயில்வே வாரிய தலைவா் வினய் குமாா் திரிபாதியிடம் சமா்ப்பித்துள்ளாா். அதன் விவரம்:

நாகா்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, ரயில் நிலையத்தின் தரத்தை உயா்த்துவது அவசியமாக இருக்கிறது. பள்ளியாடி ரயில் நிலைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தோா் வேளாங்கண்ணி செல்வதற்காக வாராந்திர ரயில், சென்னை தாம்பரம் - நாகா்கோவில்

இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். அனந்தபுரி மற்றும் மதுரை - புனலூா் விரைவு ரயில்களுக்கு குமரி மாவட்டத்தில் அதிக நிறுத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்.

குழித்துறை ரயில் நிலையத்தை வாகனங்கள் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கவும், இரணியல் ரயில் நிலையம் செல்வதற்கான புதிய இணைப்பு சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com