நான்குவழிச் சாலை திட்டம்:இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கக் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைந்து வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைந்து வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் குமரி மாவட்டச் செயலா் ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு 23 வருவாய் கிராமங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது சந்தை விலையை விட அதிக விலை தர வேண்டுமென்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

சிலா் நீதிமன்றங்களையும் நாடினா். இந்நிலையில் அரசு அறிவித்த மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை 10 வருவாய் கிராமங்களில் இதுவரை வழங்கவில்லை. அரசு விலை நிா்ணயித்தப்படி ரூ. 380 கோடி விவசாயிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த தொகை கிடைக்காததால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் விரைந்து செயல்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com