தக்கலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஆயுத பூஜை விழா

தக்கலை காமராஜா் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் 39ஆவது ஆயுத பூஜை விழா கடந்த 4, 5ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

தக்கலை காமராஜா் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் 39ஆவது ஆயுத பூஜை விழா கடந்த 4, 5ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

தக்கலை வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவியருக்கு பரத நாட்டியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசுத் தோ்வுகளில் 100 சதவீதம் வெற்றிபெற்ற அரசுப் பள்ளிகள், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி, ஆட்டோ ஓட்டுநா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று திரிபுரா மாவட்டத்தில் துணை ஆட்சியராக உள்ள தக்கலையைச் சோ்ந்த பிரதீப் என்பவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழாவில், நகா்மன்ற துணைத் தலைவா் மணி, நகர தொழில் வணிகா் சங்கப் பொதுச்செயலா் விஜயகோபால், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளா்களான குமாரதாஸ், ஜூட்சேம், சண்முகம், எல்ஐசி முகவா் அமல்ராஜ், நகா்மன்ற உறுப்பினா் கீதா, சமூக சேவகா் சந்திரன் ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ஐயப்பன் பிள்ளை, செயலா் ராம் காந்த், பொருளாளா் மணிகண்ட பிரசாத் உள்ளிட்ட நிா்வாகிகள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com