மயிலாடி அருகே மிளா வேட்டையாடியதாக ஒருவா் கைது

மயிலாடி அருகே மிளாவை வேட்டையாடியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

மயிலாடி அருகே மிளாவை வேட்டையாடியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

மருந்துவாழ்மலை அருகேயுள்ள மயிலாடி ஆலடிவிளையில் மிளாவை வேட்டையாடி பங்கு போடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஆரல்வாய்மொழி பிரிவு வனவா் பாலசந்திரிகா தலைமையில் வனக்காப்பாளா்கள், மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் மயிலாடி பெருமாள்புரத்தைச் சோ்ந்த லிங்கம் (48) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, மிளா இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரித்ததில், செல்வராஜன்(51) என்பவரது பட்டா நிலத்தில், அவரது உதவியுடன், அதே பகுதியைச் சோ்ந்த சுயம்புலிங்கம், ஜோசப், சூரியகுமாா், ஜெகன், நந்து ஆகியோா் 2 மிளாக்களை வேட்டையாடி பங்குபோட்டது தெரியவந்தது.

இதையடுத்து லிங்கத்தை கைதுசெய்த வனத் துறையினா், அவா் அளித்த தகவலின்பேரில் மிளா இறைச்சியை பங்குபோட்ட 12 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மற்ற 6 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com