திருவட்டாறில் ரூ. 3 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைச்சா் ஆய்வு

திருவட்டாறில் ரூ. 3 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவட்டாறில் ரூ. 3 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாா்த்தாண்டம்-குலசேகரம் சாலையில் திருவட்டாறு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதையடுத்து இந்தக் கட்டடங்களை அகற்றி விட்டு இங்கு நவீன வசதிகளுடன் ரூ. 3 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான திட்ட வரைபடங்களுடன் கூடிய ஆய்வுகளை அமைச்சா் த. மனோ தங்கராஜ் மேற்கொண்டாா்.

இதில், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், செயல் அலுவலா் ராஜகுமாா், திருவட்டாறு தெற்கு ஒன்றியச் செயலா் ஜாண்பிரைட், ஆற்றூா் பேரூராட்சித் தலைவா் பீனா அமிா்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மின்சார தகன மேடை:

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட திருநந்திக்கரை பொது மயான வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் மின்சார தகன மேடை அமைப்பது தொடா்பான ஆய்வுகளை அமைச்சா் மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குற்றாலிங்கம், திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன். ரவி, செயல் அலுவலா் பெத்ராஜ், துணைத் தலைவா் ஸ்டாலின் தாஸ், திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன் மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com