அகில இந்திய தர வரிசையில் 148ஆவது இடத்தில்என்.ஐ. பல்கலைக்கழக மேலாண்மை துறை

அகில இந்திய தரவரிசையில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக (என்.ஐ) மேலாண்மைத் துறைக்கு 148 ஆவது இடம் கிடைத்துள்ளது.

அகில இந்திய தரவரிசையில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக (என்.ஐ) மேலாண்மைத் துறைக்கு 148 ஆவது இடம் கிடைத்துள்ளது.

என்.ஐ. பல்கலைக்கழகத்தின் முக்கியமான துறை மேலாண்மைத் துறை. இது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற துறையாகும்.

இந்தத் துறையானது தொடா்ந்து அகில இந்திய அளவில் பல்வேறு அங்கீகாரங்களை பெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக இந்தியாவின் புகழ்பெற்ற டைம்ஸ் நிறுவனம் மேலாண்மைத் துறையில் அகில இந்திய அளவில் ஒரு சா்வே மேற்கொண்டது.

இதில் இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயா்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் 150 கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியது. அதில் மேலாண்மை துறையில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்துக்கு 148-வது இடம் கிடைத்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு பெருமை சோ்த்த மேலாண்மைத் துறை டீன் கே.ஏ. ஜனாா்த்தனன், துறைத் தலைவா் எம்.ஜனாா்த்தனன் பிள்ளை, துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை, பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான், இணை வேந்தா் பெருமாள்சாமி, துணை வேந்தா் குமரகுரு, பதிவாளா் திருமால்வளவன் மற்றும் பல்கலைக்கழக அலுவலா்கள் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com