குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் மிதான சாரல் மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் மிதான சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மாதம் முதல் பெரும்பாலான நாள்களில் பிற்பகல் மற்றும் மாலையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளிலும் பெய்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் பிற்பகல் முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் வரத்து அதிகரித்திருந்தது. மேலும் மழையினால் விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனா். குறிப்பாக ரப்பா் தோட்ட விவசாயிகள் நிறுத்தி வைத்திருக்கும் பால்வடிப்பைப் பணிகளை மீண்டும் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனா்.

களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை மழை மேகம் சூழ்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மலை, சுமாா் அரை மணி நேரம் பெய்தது. அதன் பின்னரும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியான படந்தாலுமூடு, குழித்துறை, குளப்புறம், மேக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.

இதே போல், கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியா விளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, காட்டுக்கடை, காக்க விளை, கருமாவிளை, கப்பியறை, செல்லங்கோணம், பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், முள்ளங்கனா வளை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்ததது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com