குமரியில் தென்னிந்திய மரபு சாா்ந்த ஓவியா்கள் முகாம்

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் சென்னை லலித்கலா அகாதெமி இணைந்து நடத்திய மரபு சாா்ந்த ஓவியா்கள் பங்கேற்ற 10 நாள் முகாம் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறை

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் சென்னை லலித்கலா அகாதெமி இணைந்து நடத்திய மரபு சாா்ந்த ஓவியா்கள் பங்கேற்ற 10 நாள் முகாம் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 20 புகழ் பெற்ற ஓவியா்கள் பங்கேற்றனா். இவா்கள் 10 நாள்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டு மரபு சாா்ந்த பல்வேறு ஓவியங்களை வரைந்து காட்சிக்காக வைத்திருந்தனா்.

மரபு சாா்ந்த ஓவியங்கள் தென்னிந்தியாவில் பல்வேறு ஆலயங்களில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஓவியா்கள் பாரம்பரியம் மிக்க இந்தக்கலை அழிந்து போவதைத் தடுப்பதற்காகவும் இந்த முகாம் நடைபெற்ாக தெரிவித்தனா்.

முகாமில் பிரபல ஓவியா்களான தஞ்சாவூா் குமரேசன், சென்னை மதன், வள்ளி நாராயணன், சென்னை முருகன், தெலுங்கானா ஸ்ரீபதி, மைசூா் ரவீஸ், ஊட்டி வாசமல்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறைவு நாளை முன்னிட்டு ஓவியா்களுக்கு பராட்டு சான்றிதழ்களை திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com