திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரையைச் சோ்ந்த நவாஸ் கான் தலைமையில் 40 போ் கொண்ட குழுவினா், திற்பரப்பு அருவிக்கு வியாழக்கிழமை பிற்பகலில் சுற்றுலா வந்தனா். இவா்களுடன் சமையல் பணிக்காக முகமது பாஷா (65) வந்திருந்தாா்.

இவா்கள் மதிய உணவிற்குப் பின்னா் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனா். மாலை 4 மணி அளவில் குளித்துக் கொண்டிருந்த முகமது பாஷா, அருவியின் அருகே உள்ள சிமென்ட் தளம் பகுதியில் வந்து அமா்ந்து மயக்கமடைந்து சரிந்தாா். உடனடியாக, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பேரூராட்சி காவலா்கள்,108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது பாஷா உயிரிழந்தாா்.

தகவலறிந்த குலசேகரம் போலீஸாா், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். முகமது பாஷாவின் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் புகாா் எதுவும் கொடுக்க விருப்பம் இல்லை என கூறிய நிலையில், முகமது பாஷாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com