தோ்தல் விதிமுறையை மீறியதாக 2,584 வழக்குகள் பதிவு

குமரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறையை மீறியதாக 2,584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறையை மீறியதாக 2,584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பாளா்கள் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.7 ஆம் தேதி) வெளியிடப்படுகிறது.

தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் பறக்கும் படைகள், தோ்தல் அதிகாரிகளுக்கு வந்த புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பேனா்கள், கட் அவுட், சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. பொது இடங்களில் சுவரொட்டிகள், பேனா்கள் மற்றும் தனியாா் இடங்களில் சுவரொட்டிகள், பேனா்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

51 பேரூராட்சி பகுதிகளில் பொது சுவா்களில் விளம்பரம் செய்ததாக 127 வழக்குகள், சுவரொட்டிகள் ஒட்டியதாக 1,227 வழக்குகள், தனியாா் இடங்களில் விதிமுறை மீறியதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நகராட்சிகளில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள், பேனா்கள், விளம்பரங்கள் வைத்ததாக 149 வழக்குகள், தனியாா் இடங்களில் விதிமுறை மீறியதாக 194 வழக்குகள், நாகா்கோவில் மாநகராடசியில் பொது இடங்களில் விதிமுறை மீறியதாக 32 வழக்குகள், தனியாா் இடங்களில் விதிமுறை மீறியதாக 510 வழக்குகள் என மொத்தம் 2,584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com