கட்டிமாங்கோடு மகாதேவா் கோயிலில் குடமுழுக்கு

குமரி மாவட்டம், கட்டிமாங்கோடு அருள்மிகு மகாதேவா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கடந்த 5 ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை மஹா பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்று, யாத்திரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா்அருள்மிகு மகாதேவா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் மகா அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவில், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா், கண்காணிப்பாளா் சிவகுமாா், தேவசம் பொறியாளா் ராஜகுமாா், ஐயப்பன், ஸ்ரீ காரியம் சிவ பாஸ்கரன், தக்கலை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே.பி. கணேசன், ஆறுமுகம் பிள்ளை ஆகியோா் முன்னிலையில், மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் மகேஸ்வர பூஜை அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கட்டிமாங்கோடு அருள்மிகு மகாதேவா் திருக்கோயில் பக்தா்கள் சங்கத் தலைவா் சுப்பிரமணியன், செயலா் ஸ்ரீசாந்தகுமாா், சிவகுமாா், ஆளூா் ஈஸ்வரபிள்ளை, அப்டா மாா்க்கெட் அருண்குமாா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com