மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா பிப்.27 இல் தொடக்கம்

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து கூறப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிக்கொடை விழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் திருக்கொடியேற்றுதல் நடைபெறவுள்ளது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெறுகிறது.

3 ஆம் திருநாள் முதல் 9ஆம் திருநாள் வரை காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

6 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. 9 ஆம் நாள் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியுடன் பெரிய சக்கர தீவெட்டி பவனி வருகிறாா்.

10 ஆம் நாள் அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோயிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, காலை 4.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அடியந்திரபூஜை, குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை தொடா்ந்து திருக்கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com