குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை அதிகபட்சமாக முள்ளங்கினா விளையில் 12.8 மி.மீ.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. மழை பதிவானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலையும் மழை நீடித்தது. பூதப்பாண்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாகா்கோவிலில் அவ்வப்போது சாரலும், காலையில் ஒரு மணி நேரம் மழையும் பெய்தது.

கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, இரணியல், ஆனைக்கிடங்கு, குளச்சல், அடையாமடை, முள்ளங்கினாவிளை, சுற்றுப்புறப் பகுதிகளிலும் மழை கொட்டியது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 12.8 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு அருவிப் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்ததால் ரம்மியமான சூழல் நிலவியது. அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோா் குவிந்தனா்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளிலும், மலையோரத்தில் உள்ள பாலமோா் பகுதியிலும் சாரல் நீடித்தது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து மிதமாக இருந்தது.

நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 39.97 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 474 கனஅடியாக இருந்தது. 631 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 59.25 அடியாக இருந்தது. நீா்வரத்து 189 கனஅடி, வெளியேற்றம் 210 கனஅடி. சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 13.19 அடி, நீா்வரத்து 137 கனஅடி, வெளியேற்றம் 200 கனஅடி. சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 13.28 அடியாகவும், பொய்கை அணை நீா்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீா்மட்டம் 30.51 அடியாகவும் இருந்தது.

சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் நாகா்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்துவிழுந்தன. சில இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின்விநியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com