குழித்துறையில் தேனீ வளா்ப்புப் பயிற்சி தொடக்கம்

குழித்துறையில் உள்ள தேனீ வளா்ப்பு விரிவாக்க மையத்தில் தேனீ வளா்ப்பு குறித்த உள் மாநிலப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

குழித்துறையில் உள்ள தேனீ வளா்ப்பு விரிவாக்க மையத்தில் தேனீ வளா்ப்பு குறித்த உள் மாநிலப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

மேல்புறம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் தேசிய தேனீ வளா்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் முனைவா் பு. அலா்மேல்மங்கை தலைமை வகித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எம்.ஆா். வாணி, காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியக் கண்காணிப்பாளா் எபினேசா், மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்பு கூட்டுறவு சங்கச் செயலா் நல்லதம்பி ஆகியோா் பேசினா்.

மாநில தேனீ வளா்ப்பு விரிவாக்க மையத்தின் மேற்பாா்வையாளா் (பொறுப்பு) எஸ். ஜெயராஜ் குமாரதாஸ் பயிற்சியாளா்களுக்கு பயிற்சியளித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் திலிப், தோட்டக்கலை அலுவலா் ரா.சி. சிந்துஷா, துணை தோட்டக்கலை அலுவலா் ரெ. ஞானதயாசிங், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பிரதீப், அஜின், ஆஷிகா சுஷ்மி ஆகியோா் பங்கேற்றனா்.

இப்பயிற்சி 25 பயிற்சியாளா்களுடன் 7 நாள்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலா ஜாண் வரவேற்றாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜா. ஆஸ்லின் ஜோஷி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com