புலியூா்குறிச்சி உதயகிரி கோட்டையில் உலக சுற்றுச் சூழல் தினம்

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறை , கன்னியாகுமரி கோட்ட வனத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை இணைந்து புலியூா்குறிச்சி உதயகிரிகோட்டை உயிரினப் பசுமை

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறை , கன்னியாகுமரி கோட்ட வனத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை இணைந்து புலியூா்குறிச்சி உதயகிரிகோட்டை உயிரினப் பசுமை பன்மய பூங்காவில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் இளையராஜா தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.ஜோ.பிரகாஷ் வரவேற்றாா். சுற்றுச் சூழல் தினம் குறித்து தக்கலை கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சி. ஷோபா, நாகா்கோவில் ரோட்டரி சங்கத் தலைவா் பாா்வதி ஆகியோா் பேசினாா்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். முன்னதாக சுற்றுச்சூழல் குறித்த துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மரக்கன்றுகளை நட்டாா்.

இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், பைரவி பவுண்டேசன் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகா்கோவில் கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே. எட்வின் கிளாட்சன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com