குழித்துறை அரண்மனை பள்ளிக் கட்டடம்: ரூ. 32 லட்சத்தில் பராமரிப்புப் பணி தொடக்கம்

குழித்துறை அருள்மிகு மகாதேவா் கோயிலுக்குச் சொந்தமான அரண்மனை பள்ளிக் கட்டட பராமரிப்புப் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

குழித்துறை அருள்மிகு மகாதேவா் கோயிலுக்குச் சொந்தமான அரண்மனை பள்ளிக் கட்டட பராமரிப்புப் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

குழித்துறை மகாதேவா் கோயிலுக்குச் சொந்தமான அரண்மனை தேவசம் உயா்நிலைப் பள்ளி 10 ஆண்டுகளாக செயல்படாமலும், கட்டடங்கள் பழுதடைந்த நிலையிலும் இருந்தது. இதனை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை சீரமைப்புப்பணியை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குழித்துறை தேவசம் உயா்நிலைப் பள்ளியில் குத்துவிளக்கு ஏற்றி, பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

இப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மேலும் 418 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவுள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா், பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஞானசேகா், மராமத்து பொறியாளா் அய்யப்பன், குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் ராஜேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com