யானை தாக்கியதில் உயிரிழந்தமாணவி குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம், கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மகள் செல்விஸ்ரீனா ஆகியோா் கீரிப்பாறை மலைப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வி ஸ்ரீனா உயிரிழந்தாா்.

இந்நிலையில், வனத்துறையின் சாா்பில் வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவா்களுக்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.3.50 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கி ஆறுதல் கூறினா்.

இதில், மாவட்ட வன அலுவலா் மு.இளையராஜா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, உதவி வன பாதுகாவலா்கள் மனசீா்கலிமா, சிவகுமாா், சுருளகோடு ஊராட்சித் தலைவா் விமலா, சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com