கேரளத்துக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை களியக்காவிளை சோதனைச் சாவடி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை: சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை களியக்காவிளை சோதனைச் சாவடி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு மணல், ரேஷன் அரிசி உள்ளிட்டவை கடத்திச் செல்வதை தடுக்க களியக்காவிளை உள்பட மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து போலீஸாா் கண்காணித்து வருகிறாா்கள்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாா் அப்பகுதி வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

மேலும் மோட்டாா் சைக்கிளில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 170 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த முருகன் (67) என்பவரை கைது செய்தனா்.

ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட காா், மோட்டாா் சைக்கிளை போலீஸாா் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com