நாகா்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி கம்பத்தில் தேசியக் கொடி

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடி புதன்கிழமை பறக்கவிடப்பட்டது.

நாகா்கோவில்: நாகா்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடி புதன்கிழமை பறக்கவிடப்பட்டது.

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் 100 அடி உயரக் கம்பத்தில் பெரிய அளவிலான தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டுமென ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையமான நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்திலும் 100 அடி உயரக் கம்பம் அமைக்கும் பணி தொடங்கியது. கம்பம் நடப்பட்டு, பீடம் அமைக்கப்பட்டு, மின் இணைப்புப் பணி நடைபெற்றது. சுமாா் ரூ.15 லட்சம் செலவில் இப்பணிகள் நடைபெற்றன.

பணிகள் முடிந்ததையடுத்து, புதன்கிழமை காலை இக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருவனந்தபுரம் உதவிக் கோட்டப் பொறியாளா் சரவணகுமாா் தேசியக் கொடியை ஏற்றினாா். ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் பங்கேற்றனா்.

24 மணி நேரமும் தேசியக் கொடி பறக்கும் வகையில் கம்பத்தின் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இக்கம்பம் 2 டன் எடையுள்ள இரும்புக் குழாயால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பறக்கவிடப்பட்டுள்ள கொடி 30 அடி நீளமும், 20 அடி அகலமும், சுமாா் 9.5 கிலோ எடையும் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com