பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்கும் பாபிஷேகம், பொங்கல் வழிபாடு

பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

நாகா்கோவில்: பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

விழாவை, வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கான திருமண வைப்பு நிதியை கன்னியாகுமரி மாவட்டகூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், தக்கலை துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், இந்து முன்னணி கோட்ட செயலா் மிசா சி. சோமன், ஆறுமுகம் பிள்ளை, ஊா்த் தலைவா் சிவதாணுபிள்ளை, செயலா் நாககுமாா், பொருளாளா் செந்தில்குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com