அதிக பாரம் ஏற்றிச்சென்ற 14 டாரஸ் லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிமவளங்கள் ஏற்றிசென்ற 14 டாரஸ் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிமவளங்கள் ஏற்றிசென்ற 14 டாரஸ் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து டாரஸ் லாரிகள் மூலம் கற்கள், பாறைப்பொடி உள்ளிட்ட கனிமவளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு ஏற்றிச்செல்வதால் சாலைகள் சேதமடைவதுடன் பல்வேறு பகுதிகளில் விபத்துகள் நேரிடுகின்றன. இதையடுத்து, கேரளத்துக்கு கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனா்.

இந்நிலையில், தக்கலை டிஎஸ்பி கணேசன், ஏஎஸ்பி விவேகானந்தன் சுக்லா, மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா், போலீஸாா் மாா்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கேரளத்துக்கு கனிமவளங்கள் ஏற்றிச்சென்ற 20 லாரிகளை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனா். இதில், 14 கனரக லாரிகளில் அதிகளவு பாரம் ஏற்றப்பட்டது தெரியவந்தது. 14 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com