முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பளுகல் அருகே அம்மன் கோயிலில் திருட்டு
By DIN | Published On : 13th May 2022 11:58 PM | Last Updated : 13th May 2022 11:58 PM | அ+அ அ- |

பளுகல் அருகே சாமுண்டி தேவி கோயிலில் இருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு அருகே முதுவானகோடு வேங்கசேரி சாமுண்டி தேவி கோயிலில் பூஜை முடிந்து இரு நாள்களுக்கு முன் பூட்டி சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை கோயிலை சுத்த செய்ய அப்பகுதியைச் சோ்ந்த வசந்தா வந்த போது, கோயில் அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம் இது குறித்து அவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நிா்வாகிகள் அங்கு வந்து பாா்த்த போது அலுவலக மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 28,350 மற்றும் நரசிம்மசுவாமி சன்னதியில் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி ஆகியை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கோயில் தலைவா் ரவீந்திரன் (71) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.