செவ்வேலி-வலியவிளை சாலையில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க வலியுறுத்தல்

கருங்கல் அருகேயுள்ள செவ்வேலி - வலியவிளை சாலையில் மழைநீா் தேங்காமலிருக்க வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் அருகேயுள்ள செவ்வேலி - வலியவிளை சாலையில் மழைநீா் தேங்காமலிருக்க வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சிப் பகுதியில் உள்ளது செவ்வேலி - வலியவிளை சாலைப் பகுதி. இங்கு 100-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இங்கு வடிகால் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள், நடந்துசெல்வோா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் மழைநீா் தேங்காதவாறு வடிகால் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com