கஞ்சா கடத்தலை தடுக்க ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக நாகா்கோவில் ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக நாகா்கோவில் ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை, குளச்சல் காவல் உள்கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறாா்கள்.

கடந்த 2 மாதங்களில் 100- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து போலீஸாா் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்களிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையிலான போலீஸாா் ரயில்களில் சோதனை மேற்கொண்டனா்.

சென்னை, கோவை பகுதிகளிலிருந்து வந்த விரைவு ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. ரயில்களில் இருந்த பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com