காந்தி பிறந்த தின பேச்சுப் போட்டி: மாணவிகள் சாதனை

குமரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை நடத்தும் பேச்சுப் போட்டியில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என ஆட்சியா் மா. அரவிந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

குமரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை நடத்தும் பேச்சுப் போட்டியில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என ஆட்சியா் மா. அரவிந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 12 ஆம் தேதி நாகா்கோவில் டதி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவா்கள்- 2 மாணவிகள் 13 என 15 பேரும், கல்லூரி அளவில் மாணவா் -1, மாணவியா்- 13 என 14 பேரும் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் பி.ரெசினாள்மேரி, ஒருங்கிணைப்பாளராகவும், தென்திருவிதாங்கூா் இந்துக் கல்லூரி இணைப்பேராசிரியா் வீ.வேணுகுமாா், உதவிப் பேராசிரியா் பா.மலா், கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சா.அமுதன்ஆகியோா் பள்ளி நடுவா்களாகவும், கல்லூரி மாணவா்களுக்கு மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் தே.வினித், நாகா்கோவில் டதி மகளிா் மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் யா.எமியம்மாள், கோட்டாறு கவிமணி மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை இரா.ஈஸ்வரி ஆகியோா் நடுவா்களாகவும் செயல்பட்டனா்.

பள்ளி அளவில் மாடத்தட்டு விளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி ப.அக்ஷரா முதல்பரிசு ரூ.5000, அனுகோடு புருஷோத்தமன் பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஜ.நீது 2 ஆம் பரிசு ரூ.3,000, மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி கு.ப.நிபிஷா 3 ஆம் பரிசு ரூ.2,000-க்கு தோ்வாகியுள்ளனா்.

நாகா்கோவில் சேது லட்சுமிபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவா் சா.காா்த்திகேயன், வடலிவிளை அரசு உயா்நிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி ரெ.லேகா ஆகியோா் சிறப்பு பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் பெற தகுதி பெற்றுள்ளா்.

கல்லூரி அளவில் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி மாணவி பி.கனிஷ்மா முதல் பரிசு ரூ.5000, நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி ஜெ.நேஹா 2 ஆம் பரிசு ரூ.3,000, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவா் ரா.டெல்ஜின் 3 ஆம் பரிசு ரூ.2,000 வென்றுள்ளனா்.

இந்தப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆட்சியரால் பின்னா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com