தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பு குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தக்கலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பு குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தக்கலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தக்கலை அரசு ஊழியா் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா். தக்கலை கல்வி மாவட்ட செயலா் ராபா்ட் ஞானதாஸ் வரவேற்றாா். மாவட்ட செயலா் டோமினிக்ராஜ் வேலை அறிக்கையை சமா்பித்தாா். பொதுச்செயலா் கனகராஜ் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத்தலைவா் கண்ணன் நிறைவுரையாற்றினாா்.

கூட்டத்தில் துணைப் பொதுச்செயலா் சிவஸ்ரீ ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் வினோத், பிரைட்சிங் மோரிஸ், சவரிமுத்து, மோகன்ராஜ், சகோ. குழந்தை தெரஸ் மற்றும் மாவட்ட, வட்டார நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநில செயற்குழு உறுப்பினா் பினோபா நன்றி கூறினாா்.

கொல்லங்கோடு , ஏழுதேசம், தூத்தூா் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சியாக தரம் உயா்த்திய நிலையில் அந்நகராட்சிப் பகுதிகளிலுள்ள ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு நகராட்சிக்கான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா் அலுவலா் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் அக்.20 ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் குமரி மாவட்டம் சாா்பில் 500 போ் பங்கேற்கவேண்டும். கன்னியாகுமரியில் நவ. 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் சி.ஐ.டி.யு. மாநாட்டிற்கு பெருமளவில் நிதி உதவி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com