நட்டாலம் பகுதியில் இறைச்சி கழிவுகள் வீசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் பகுதியில் இறைச்சிக் கழிவுகளை வீசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் பகுதியில் இறைச்சிக் கழிவுகளை வீசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்நிலைகளான குளங்கள், கால்வாய்கள், சானல் பகுதிகள் மற்றும் நீரோடைகள் , பொது இடங்களில் சமூக விரோதிகள் இறைச்சிக்கழிவுகளை வீசிவிட்டு தப்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட சானல் பகுதிகள் மற்றும் குளம் கரைகளில் இறைச்சிக்கழிவுகளை சமூக விரோதிகள் அவ்வப்போது வீசிவந்தனா். இதைனை தடுக்க நட்டாலம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் சாா்பில்

நீா்நிலைப் பகுதிகளில் இறைச்சிகழிவுகளை வீசுபவா்களை நேரடியாக பிடிக்க கடந்த ஒரு மாதமாக காவலில் ஈடுபட்டனா்.

கடந்த வாரம் நட்டாலம் மதுரைகுளம் கரையில் இறைச்சிகழிவுகள் வீசவந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து மாா்த்தாண்டம் போலீஸில் ஒப்படைத்தனா். போலாஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

எனவே, நீா்நிலைப் பகுதிகளில் இறைச்சிகழிவுகளை வீசும் சமூக விரோதிகளை பிடிக்க போலீஸாா் தீவிரரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com