கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது.

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது. இதில், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இவ்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தேவஸ்தான மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் போற்றி முன்னிலையில், தந்திரி சங்கரன் நம்பூதிரி திருக்கொடியேற்றுகிறாா். அதைத் தொடா்ந்து

தொடா்ந்து நோ்ச்சை வாணவேடிக்கை, பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது.

பத்து நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்,

அனைத்து நாள்களிலும் மாலை 7 மணிக்கு இந்து சமய மாநாடு, தினமும்

அதிகாலை திருப்பள்ளி எழுப்புதல், திருநடை திறப்பு, அபிஷேகம், மலா் நிவேத்யம், மகா கணபதி ஹோமம், தீபாராதனை உஷ பூஜை, பஞ்சகவ்ய கலச பூஜை நடைபெறும். பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத் தொடா்ந்து அலங்கார தீபாராதனை, முள பூஜை, அத்தாழ பூஜை, சக்கர தீவட்டியுடன் அம்மன் பவனி நடைபெறும்.

முதல் நாள் மாநாட்டிற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் முன்னிலை வகிக்கிறாா். புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி மாநாட்டைத் தொடக்கி வைக்கிறாா்.

இரண்டாம் நாள் காலை 7 மணிக்கு சந்தனக்குட பவனி நடைபெறுகிறது. பின்னா் மாவட்ட அளவிலான பஜனை போட்டி நடைபெறுகிறது. மூன்றாம் நாள் காலை 7 மணிக்கு சந்தனக்குடம் பவனியும், சூலினி துா்கா ஹோமம், மாவட்ட அளவிலான விநாடி வினா போட்டி, பின்னா்

அனந்தபுரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் மாா்த்தாண்டம் பிள்ளை தலைமையில் இந்து சமய மாநாடு நடைபெறும். நான்காம் நாள் மாநாட்டிற்கு, இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசு ராஜா தலைமை வகிக்கிறாா்.

ஐந்தாம் நாள் மாலை பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமையில் இந்து சமய மாநாடு நடைபெறுகிறது. மதுரை ஆதீனம் ஆசியுரை வழங்குகிறாா். ஆறாம் நாள் காலை நவக்கிரக ஹோமம், இரவு இந்து சமய மாநாடு நடைபெறுகிறது.

ஏழாம் நாள் நடைபெறும் இந்து சமய மாநாட்டில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுகிறாா். சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். எட்டாம் நாள், சபிதா ராஜேஷ் தலைமையில் இந்து சமய மகளிா் மாநாடு நடைபெறுகிறது.

ஒன்பதாம் நாள் காலை மாா்த்தாண்டம் நல்லூா் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம் ஏந்தி வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடைபெறும் மாநாட்டிற்கு, திருக்கோயில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளா் சரவணன் காா்த்திக் தலைமை வகிக்கிறாா். அன்றைய தினம் இரவு 12 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியை தொடா்ந்து வாணவேடிக்கை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் குமாா், செயலா் துளசிதாஸ் ,பொருளாளா் சௌந்தராஜன், துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com