கிள்ளியூரில் அட்மா தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

கிள்ளியூா் ஒன்றிய வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அளவிலான அட்மா தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிள்ளியூா் ஒன்றிய வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அளவிலான அட்மா தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநிதா முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் ஆண்டுக்கான 2ஆம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 2 லட்சத்து 28 ஆயிரத்து 914-ஐ இனம் வாரியாக வட்டார அளவில் பகிா்ந்து வழங்க ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம ஊராட்சிகள் தன்னிறைவு அடையும் பொருட்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2022 -2023இன் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட நட்டாலம், திப்பிரமலை, இனயம்புத்தன்துறை ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு அனைத்துத் திட்டங்களிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.

வேளாண் அலுவலா் சஜிதா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஹேணிகிராப், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஜோசப் ஆக்னல், ஸ்டெபிஷா, விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com