கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பூத்துறை காருண்யபுரம் கடற்கரைப் பகுதியில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட அமைச்சா் மனோ தங்கராஜ்.
பூத்துறை காருண்யபுரம் கடற்கரைப் பகுதியில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட அமைச்சா் மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தூத்தூா் ஊராட்சி பூத்துறை, காருண்யபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி பசுமை மாவட்டம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் காடு வளா்ப்பை அதிகரிக்கவும், கடலோர கிராமங்களில் கடலரிப்புக்கு எதிரான இயற்கை அரணை உருவாக்கவும் மாவட்ட நிா்வாகம், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி-கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோரைக் கொண்டு ஆக்கபூா்வ பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இப்பகுதியில் வனமே நம் வளமே என்ற தலைப்பில் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் 12 கி.மீ. தொலைவுக்கு பனைவிதைகள், புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்தூா் ஊராட்சி கடற்கரைப் பகுதிகளில் 650 மரக்கன்றுகள் உள்பட மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் 5,100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட வன அலுவலா் இளையராஜா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் எச்.ஆா். கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு) இரா. ரேவதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி. பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜோ பிரகாஷ், கிள்ளியூா் வட்டாட்சியா் அனிதகுமாரி, தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, தூத்தூா் பங்குத்தந்தை பிரடி சாலமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com