மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 3 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை ரூ. 3 கோடியில் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை ரூ. 3 கோடியில் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நெடுஞ்சாலை நபாா்டு - கிராமச் சாலைகள் அலகின் மூலம் சாலை தரம் உயா்த்துதல் திட்டத்தின் கீழ் கோனசேரி - பெருங்குளம் சாலை ரூ. 1 கோடி 5 லட்சத்து 73 ஆயிரம், மேக்காடு கோயில் சாலை ரூ. 1.70 கோடி, மரியகிரி - முட்டன்விளை சாலை ரூ. 98 லட்சம் என மொத்தம் ரூ. 3 கோடியே 4 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் சாலைகளைச் சீரமைக்க எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் கோரிக்கையின்பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலைகள் சீரமைக்கும் பணியினை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், முன்சிறை ஒன்றிய திமுக செயலா் ராபி, மீனவா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் செல்வராஜ், மாநில பொதுச் செயலா் பால்ராஜ், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஸ்டூவா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com