சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் தெப்பத் திருவிழா: கால்நாட்டு வைபவம் ஏப். 21இல் கொடியேற்றம்

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஏப்.21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஏப்.21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலான சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோயிலில், சித்திரை, ஆவணி, மாா்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.

நிகழாண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை(ஏப்.21) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊா்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மெல்லிசை நடைபெறுகிறது.

29 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளலும் நடைபெறுகிறது.

இதற்கான கால்நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தாணுமாலயசுவாமி சந்நிதியின் அருகே உள்ள முருகன் சந்நிதி முன்பு கால்நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகா் பரமேஸ்வரன் சா்மா, தெற்கு மண்மடம் ஸ்தானிகா் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊா் வகை டிரஸ்டி ரவீந்திரன், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினரும், பக்தா்களும் இணைந்து செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com