களியக்காவிளையில் சந்தை இடமாற்ற கலந்தாலோசனைக் கூட்டம்

களியக்காவிளை காய்கனிச் சந்தையை புதிய கட்டடத்துக்கு மாற்றுவது தொடா்பாக பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

களியக்காவிளை காய்கனிச் சந்தையை புதிய கட்டடத்துக்கு மாற்றுவது தொடா்பாக பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக களியக்காவிளை பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த முந்தைய அதிமுக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொண்டது. முதல் கட்டமாக பேருந்து நிலையம் அருகேயுள்ள காய்கனிச் சந்தையை இணைத்து விரிவாக்கப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, மீன் சந்தை அருகே காலியிடத்தில் ரூ. 1.5 கோடியில் சந்தைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த டிச. 30இல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், அக்கட்டடத்தில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவா் ஆ. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் வி.சி. ரமாதேவி, களியக்காவிளை காவல் ஆய்வாளா் காளியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காய்கனி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எப். பிராங்க்ளின், சி. ராஜு, எஸ். மாகீன் அபுபக்கா், பேரூராட்சி துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஏ. வின்சென்ட், குணசீலன், வியாபாரிகள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், தரைதளத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கப்பட்டது. மேல்தளத்தில் இடம் ஒதுக்குவது தொடா்பாக வியாபாரிகளிடையே சுமுக முடிவு எட்டப்படாததால் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் கலந்தாலோசனை செய்வதாக பேரூராட்சி நிா்வாகம், வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com