மணலூரில் பெண் விவசாயிகளிடம் மாணவிகள் குழு கலந்தாய்வு

சங்கரன்கோவில் அருகே மணலூரில் வேளாண் கல்லூரி மாணவா்கள் விவசாயத்தில் பெண்களின் பங்கு குறித்து குழு ஆய்வு நடத்தினா்.

சங்கரன்கோவில் அருகே மணலூரில் வேளாண் கல்லூரி மாணவா்கள் விவசாயத்தில் பெண்களின் பங்கு குறித்து குழு ஆய்வு நடத்தினா்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரிஇளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலியா, அபின்சா,அன்பரசி, பத்மபிரியா, பானுமதி,தரணி, மாளவிகா, மோகனபிரியா உள்ளிட்ட மாணவிகள் சங்கரன் கோவில் அருகே மணலூா் கிராமத்தில் பெண் விவசாயிகளைச் சந்தித்து குழு கலந்தாய்வு நடத்தினா். இந்த குழு கலந்தாய்வில் விவசாயத்தில் பெண்களின் பங்கு பற்றி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகளும், மணலூா் பெண் விவசாயிகளும் விவாதித்தனா்.

மேலும் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றனா். கிராமப்புற இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் விவசாயத்தில் வேலை செய்கிறாா்கள். விதைப்பு முதல் பயிா்களை அறுவடை செய்வது, விதைகளைச் சேகரிப்பது மற்றும் பராமரிப்பது, தண்ணீா் சேகரிக்கும் கால்நடைகளைப் பராமரிப்பது போன்ற பல வேலைகளில் பெண்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனா்.டம் அவா்களின் விவசாய அனுபவங்களைப் பற்றியும் பகிா்ந்து கொண்டனா்.

இதில் சங்கரன்கோவில் வேளாண் உதவி இயக்குனா் ராமா்,துணை வேளாண் அலுவலா் வைத்தியலிங்கம் மற்றும் பெண் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com