குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு மேயா் வேண்டுகோள்

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 52 ஆவது வாா்டு தெங்கம்புதூரில், குப்பைகள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லையெனவும், புத்தளம் பேரூராட்சிப் பகுதி குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேயா் ரெ.மகேஷ் மற்றும் மாநகாரட்சி அலுவலா்ளுடன் தெங்கம்புதூரில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒனாட்சி கிடங்கு பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படும் இடத்தையும் பாா்வையிட்டாா். அப்போது பொதுமக்கள், புத்தளம் பேரூராட்சியிலிருந்து கொண்டு வரப்படும் குப்பைகள், இப் பகுதியில் எரிக்கப்படுவதாகப் புகாா் தெரிவித்தனா். பின்னா் அரியபெருமாள் காலனியில் செயல்படாத நிலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், தெங்கம்புதூா் சந்திப்பில் உள்ள தனியாா் மீன் சந்தை ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து மேயா் மகேஷ், நிருபா்களிடம் கூறியதாவது:

நாகா்கோவில் மாநகராட்சியை குப்பையில்லாத நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ஒவ்வொரு வாா்டிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தெங்கம்புதூா் பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும். இதில் மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்படும். குப்பைகளை எரிப்பவா்கள் மீது குடும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மண்டல தலைவா் ஜவகா், நகா்நல அலுவலா் ராம்குமாா், வாா்டு உறுப்பினா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com