நாகா்கோவில் நாகராஜா கோயிலில் 28இல் தைத்திருவிழா தொடக்கம்

நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் தைத்திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் தைத்திருவிழா இம்மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா 28ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடு, இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

2, 3, 4ஆம் நாள்களில் காலை 7 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

5ஆம் நாளான பிப். 1ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், முளைப்பாரி பூஜை உள்ளிட்டவையும், இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும்.

தேரோட்டம்: 9ஆம் நாளான பிப். 5ஆம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அமைச்சா் மனோ தங்கராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைக்கிறாா். இதில், ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத், மேயா் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பின்னா், அன்னதானம், மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு கச்சேரி, 9 மணிக்கு சப்தாவா்ணம் நடைபெறுகிறது.

10ஆம் நாளான பிப். 6ஆம் தேதி காலை சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், மாலை 5 மணிக்கு கோயில் குளத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு ஆராட்டுத் துறையிலிருந்து கோயிலுக்கு சுவாமி எழுந்தருளலும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com